LOADING

Type to search

இலங்கை அரசியல்

யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் புதிய ஆயராக பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம் ஆண்டகை பொறுப்பேற்றார்!

Share

யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் புதிய ஆயராகப் பொறுப்பேற்ற பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம் ஆண்டகைக்கு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் நேரில் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் புதிய ஆயராக நியமிக்கப்பட்டுள்ள பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம் ஆண்டகையின் பணிப்பொறுப்பேற்பு நிகழ்வு 26ம் திகதி புதன்கிழமை அன்று (26.08.2026) யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் கலந்துகொண்டு புதிய ஆயருக்கு நல்வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

புதிய ஆயரின் பணிப்பொறுப்பேற்பை முன்னிட்டு நடைபெற்ற மத நிகழ்வில் மறைமாவட்டத்தின் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், திருச்சபை நிர்வாகிகள், விசுவாசிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் சர்வமதத் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரச அதிகாரிகள், பாதுகாப்புத் தரப்பினர் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த பெருமளவானோர் பங்கேற்றனர்.