2029-ல் ‘இந்தியா’ கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்திதான்யென்று அமைச்சர் விஸ்வநாதன் தெரிவித்தார்
Share
2029 மக்களவைத் தேர்தலில் ‘இந்தியா’ கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திதான்யென்று தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் தெரிவித்தார்.
அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட பிற தேசிய தலைவர்கள் குறித்தும் பரவலான விவாதங்கள் நடைபெற்று வரும் நிலையில், தமிழக முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்யை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் ஆளும் தரப்பு (தவெக) அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களின் ஒரு பகுதியினரிடமிருந்து எழுந்துள்ள சூழலில் இவரது கருத்து வெளியாகியுள்ளது. இது குறித்து அவர் கூறுகையில், “காங்கிரஸ் தலைவர்களாகிய நாங்கள் இதில் மிக தெளிவாக இருக்கிறோம். எங்கள் அன்பிற்குரிய தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்திதான் 2029-க்கான ‘இந்தியா’ கூட்டணியின் பிரதமர் வேட்பாளர்” என்று அமைச்சர் விஸ்வநாதன் தெரிவித்தார்.















