LOADING

Type to search

உலக அரசியல்

நேபாளம் பெருவெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,127ஆக அதிகரித்துள்ளது

Share

நேபாள பெருவெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,127ஆக அதிகரித்துள்ளது. திபெத்தின் இமயமலை பகுதியில் கடந்த 26-ந்தேதி பனிச்சரிவு காரணமாக போடே கோஷி ஆற்றில் வெள்ளப்பெருக்கு உண்டானது. இந்த வெள்ளம், நேபாளத்தின் வடக்கு மற்றும் மத்திய மாவட்டங்களை தாக்கியது. பாறைகள் மண், சேறு-சகதிகளுடன் சீறிப்பாய்ந்து வந்த வெள்ளம் பெரும் பேரழிவை ஏற்படுத்தியது. சுற்றுலா பயணிகள் உள்பட ஆயிரக்கணக்கானோர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். நேபாளத்தில் 2-வது வாரமாக மீட்புப்பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. அதேபோல் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட உடல்களை நேபாள ராணுவத்தினர் படகுகளில் சென்று மீட்டு வருகிறார்கள். நேற்று காலை நுவாகோட்டின் பெத்ராபதி பகுதியில் சேற்றில் புதையுண்ட ஒரு வீட்டில் இருந்து 23 பேரின் உடல்களை மீட்புக்குழுவினர் மீட்டனர். அதே போல் பல வீடுகளில் இருந்து உடல்கள் மீட்கப்பட்டு வருகின்றன. இதன்மூலம் இந்த பேரிடருக்கு 903 பேர் பலியாகி இருந்தநிலையில் நேற்று மட்டும் 100 பேர் உடல்கள் மீட்கப்பட்டன. இந்நிலையில் மேலும் சில உடல்கள் மீட்கப்பட்டுள்ளநிலையில், நேபாள பேரிடர் பலி எண்ணிக்கை 1,127 ஆக அதிகரித்துள்ளது.