LOADING

Type to search

உலக அரசியல்

நேபாள பெருவெள்ளத்தால் ரூ.24,187 கோடி சொத்துகள் சேதமடைந்துள்ளன

Share

நேபாள பெருவெள்ளத்தால் ரூ.24,187 கோடி மதிப்பிலான சொத்துகள் சேதமடைந்துள்ளன. கடந்த வாரம் நேபாளத்தில் ஏற்பட்ட பேரிடர் வெள்ளத்தில், குறைந்தது 387.5 பில்லியன் நேபாள ரூபாய் (2.56 பில்லியன் அமெரிக்க டாலர்) மதிப்புள்ள சொத்துக்கள், வீடுகள் மற்றும் உள்கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளதாக அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதாவது இந்திய மதிப்பில் ரூ.24,187.59 கோடி மதிப்பிலான சொத்துகள் சேதமடைந்துள்ளன. இந்த சேதமதிப்புகளைத் தவிர சாலைகள், தற்காலிக முகாம்கள் அமைத்தல், குடிநீர் வழங்குதல், மின்சாரம் வழங்குதல் உள்ளிட்ட மீட்பு மற்றும் அத்தியாவசிய கட்டுமானப் பணிகளுக்கு அடுத்த நான்கு மாதங்களில் மட்டும் ரூ.497 கோடி செலவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் குறைந்த 7500 வீடுகள் முற்றிலும் அடித்து செல்லப்பட்டதாகவும், தற்போது சுமார் 20 ஆயிரம் வீடுகளை மீண்டும் கட்டவேண்டிய சூழல் இருப்பதாகவும் அந்நாட்டின் தேசிய பேரிடர் இடர் குறைப்பு மற்றும் மேலாண்மை ஆணையத்தின் தலைவர் தர்ம ராஜ் உப்ரேதி தெரிவித்தார்.