LOADING

Type to search

உலக அரசியல்

இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹமாஸின் முக்கிய தளபதி கொல்லப்பட்டார்

Share

இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹமாஸின் முக்கிய தளபதி கொல்லப்பட்டார். மத்திய கிழக்கு நாடான இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் காசா பகுதிக்கு இடையே நீண்ட நாட்களாக போர் பதற்றம் நிலவி வருகிறது. கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி, ஒட்டு மொத்த உலகையே உலுக்கிய ஒரு பயங்கர சம்பவத்தை காசாவின் ஹமாஸ் அமைப்பினர் அரங்கேற்றினர்.

இஸ்ரேல் எல்லைக்குள் அத்துமீறிப் புகுந்த அவர்கள், அங்குள்ள சுக்பா ராணுவ முகாம் மீது கொடூரமான தாக்குதலைத் தொடுத்து, நூற்றுக்கணக்கான பொதுமக்களைக் கொன்று குவித்ததுடன், ஏராளமானோரைப் பிணைக் கைதிகளாகவும் கடத்திச் சென்றனர். இந்த கொடூரத் தாக்குதலுக்குக் காரணமான ஒவ்வொருவரையும் வேட்டையாடுவோம் என இஸ்ரேல் ராணுவம் சபதம் ஏற்றிருந்தது. இந்தச் சூழலில், காசாவின் தெற்குப் பகுதியில் உள்ள கான்யூனிஸ் நகரில் இஸ்ரேல் விமானப் படையின் போர் விமானங்கள் திடீரென அனல் பறக்கும் வான்வழித் தாக்குதலை நடத்தின. ஹமாஸின் முக்கிய நிலைகளைக் குறி வைத்து நடத்தப்பட்ட இந்தத் துல்லியமான தாக்குதலில், அக்டோபர் 7-ல் நடந்த தாக்குதலை முன்னின்று தலைமை தாங்கிய ஹமாஸின் ‘நுக்பா’ சிறப்புப் படைப்பிரிவு தளபதி முகமது மஹ்மூத் மர்ஷாத் அல்-காடி கொல்லப்பட்டார்.