LOADING

Type to search

சினிமா

ராமராஜன், இளையராஜா கூட்டணியில் உருவாகும் புதிய படம் ‘கடவுள் தந்த பரிசு’

Share

 ராமராஜன்-இளையராஜா கூட்டணியில் உருவாகும் புதிய படத்திற்கு ‘கடவுள் தந்த பரிசு’ என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக, பல வெற்றிப் படங்களை தந்தவர் ராமராஜன். குறிப்பாக இளையராஜா இசையில் இவர் நடித்த படங்களின் பாடல்கள் பட்டிதொட்டி எங்கும் ஒலித்து இவருக்கு தனி அடையாளத்தை உண்டாக்கியது. ராமராஜன் கடைசியாக கடந்த 2024-ம் ஆண்டு ‘சாமானியன்’ என்ற படத்தில் நடித்திருந்தார். இதற்கிடையில் மீண்டும் ஒரு புதிய படத்தில் ராமராஜன் நடிக்கவுள்ளார். இந்தப்படத்துக்கு கதை, திரைக்கதை எழுதி காசிமாயன் இயக்குநராக அறிமுகமாகிறார். நகைச்சுவை பகுதியை ராஜகோபால் எழுதுகிறார். வசனத்தை ராஜகோபால், எம்.அடைக்கலம் இருவரும் எழுதுகிறார்கள். ‘கடவுள் தந்த பரிசு’ என்று பெயர் சூட்டப்பட்டிருக்கும் இந்த படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார். இருவரின் கூட்டணியில் வெளியாகும் 25-வது படம் இதுவாகும். இதுதவிர செந்தில், கோவை சரளா இருவரும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு, ராமராஜனுடன் இணைந்து, இந்த படத்தில் நகைச்சுவையில் கலக்க உள்ளார்கள். ராமராஜன்-இளையராஜா கூட்டணியில் புதிய படம் உருவாக இருப்பது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பாடல் பதிவுடன் படப்பிடிப்பு பணிகள் தொடங்கியுள்ளது.