LOADING

Type to search

உலக அரசியல்

கேப் வெர்டே நாட்டில் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விபத்தில் 25 பேர் உயிரிழந்தனர்

Share

கேப் வெர்டே நாட்டில் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் பள்ளிக்குழந்தைகள் உள்பட 25 பேர் உயிரிழந்தனர். ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள தீவு நாடு கேப் வெர்டே. இந்நாட்டின் பகொ தீவில் ஷடஸ் கல்டிரஸ் பகுதியில் ஆம்னி பேருந்தில் பள்ளிக்குழந்தைகள், சிறுவர்கள் என 32 பேர் சுற்றுலா சென்றனர். மலைப்பாங்கான பகுதியில் சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் பள்ளிக்குழந்தைகள் உள்பட 25 பேர் உயிரிழந்தனர். மேலும், 7 பேர் படுகாயமடைந்தனர். இந்த விபத்து குறித்து தகவலறிந்த மீட்புக்குழுவினர் விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த விபத்து குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.