LOADING

Type to search

உலக அரசியல்

இந்தோனேசியா எரிமலை வெடிப்பால் பாதிக்கப்பட்ட நிலையில் மீண்டும் விமான நிலையங்கள் இயங்கத் தொடங்கியது

Share

இந்தோனேசியா எரிமலை வெடிப்பால் பாதிக்கப்பட்ட நிலையில் மீண்டும் விமான நிலையங்கள் இயங்கத் தொடங்கியது. இந்தோனேசியாவில் உள்ள அனக் கிரகடாவ் எரிமலை வெடித்ததால், அந்த பகுதியில் வளிமண்டலத்தில் எரிமலை சாம்பல் படர்ந்துள்ளது. இதனால் ஜகார்த்தா உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் 8 விமான நிலையங்கள் மூடப்பட்டன. இதன் காரணமாக மேலும் சுமார் 2 ஆயிரத்து 300 விமானங்கள் ரத்து செய்யப்பட்டு, 22 லட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜகார்த்தா, மேற்கு ஜாவா, பான்டென் மற்றும் லம்புங் மாகாணங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு, ஆன்லைன் வகுப்புகள் நடைபெறுகின்றன. எரிமலை வெடிப்பு தற்போது குறைந்தாலும், மீண்டும் வெடிக்க வாய்ப்புள்ளதாக புவியியல் ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்நிலையில் எரிமலையிலிருந்து வெளியேறிய சாம்பல் காரணமாக மூடப்பட்டிருந்த ஜகார்த்தாவில் உள்ள முக்கிய விமான நிலையம் மற்றும் பிற நான்கு விமான நிலையங்களை இந்தோனேசியா மீண்டும் திறந்துள்ளது. முக்கியமான உள்கட்டமைப்பு வசதிகளிலிருந்து எரிமலை சாம்பலை அதிகாரிகள் அகற்றியதைத் தொடர்ந்து, இன்று இந்த ஐந்து விமான நிலையங்களும் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தன.