LOADING

Type to search

இந்திய அரசியல்

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச்செயலகம் அமைப்பதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது

Share

சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் அமைப்பதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் புதிதாக ஆட்சி பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றி கழக அரசு, ரூ.1,200 கோடியில் புதிய தலைமைச் செயலகம் கட்ட முடிவு செய்தது. இதற்கான அறிவிப்பை சமீபத்தில் முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் சட்டசபையில் வெளியிட்டார். ஆனால், அப்போது எந்த இடத்தில் புதிய தலைமைச்செயலகம் அமையப்போகிறது என்பதை அவர் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில், புதிய தலைமைச்செயலகம் கட்டுவதற்கு பட்டினப்பாக்கம், கிண்டியில் உள்ள நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் நந்தம்பாக்கத்தில் உள்ள பின் டெக் சிட்டிக்கு எதிரே உள்ள நிலம் ஆகிய 3 இடங்கள் தேர்வு செய்யப்பட்டன. தற்போது, பட்டினப்பாக்கம் சாந்தோம் பிரதான சாலையில் இருந்து அணுகு சாலையில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான இடத்தில் புதிய தலைமைச்செயலகம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்திற்கு சொந்தமான இந்த இடம் 21.37 ஏக்கர் பரப்பளவை கொண்டது. இந்த பகுதியில் தற்போதைய மார்க்கெட் மதிப்பு சதுரடிக்கு ரூ.22 ஆயிரம் ஆகும். அதை வைத்து கணக்கிடும்போது, இடத்தின் மொத்த மதிப்பு சுமார் ரூ.2,047 கோடியாக உள்ளது. இந்த இடத்தை பொதுத்துறை பயன்பாட்டிற்கு வழங்குவதாக தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் தெரிவித்திிருந்தது. இந்நிலையில் சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் அமைப்பதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. இதற்காக பட்டினப்பாக்கத்தில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்திற்கு சொந்தமான 21.37 ஏக்கர் பரப்பளவில் நிலங்களை அரசு அடையாளம் கண்டுள்ளது. இதன்படி அங்கு ரூ.1,200 கோடி மதிப்பில் அனைத்து நவீன வசதிகளுடன் புதிய தலைமை செயலகம் அமைய உள்ளது.  சட்டமன்றம் மற்றும் பல்வேறு அரசுத் துறைகளை ஒரே ஒருங்கிணைந்த வளாகத்தின் கீழ் கொண்டு வருவதே இத்திட்டத்தின் நோக்கம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.