LOADING

Type to search

சினிமா

”ஏஜிஎஸ் 29” திரைப்படம் பூஜையுடன் தொடங்கியது

Share

ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தனது ஏஜிஎஸ்29 திரைப்படத்தை பூஜையுடன் தொடங்கியது.  ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவான ‘பிளாஸ்ட்’ பிளாக்பஸ்டர் திரைப்பட வெற்றியை தொடர்ந்து கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில் எம் எஸ் ஆனந்தன் இயக்கத்தில் ஜெய், பிரியங்கா மோகன், யோகி பாபு நடிக்கும் ‘ஏஜிஎஸ் 29’ திரைப்பட்ம் பூஜையுடன் தொடங்கியது. ஜெய், பிரியங்கா மோகன், யோகி பாபு ஆகியோர் நடிக்கும் இப்படத்தில் முக்கிய வேடங்களில் ராஜீவ் மேனன், நாசர், ஜி.எம். சுந்தர், ரமேஷ் திலக், அருள் தாஸ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். விறுவிறுப்பான ஆக்‌ஷன் திரில்லராக நகைச்சுவை மற்றும் இதர அம்சங்களுடன் இத்திரைப்படம் உருவாக இருக்கிறது. ‘சக்ரா’ படத்தை இயக்கிய இயக்குநர் எம்.எஸ். ஆனந்தன் இத்திரைப்படத்தை இயக்குகிறார். கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில் இத்திரைப்படமானது உருவாக இருக்கிறது.