LOADING

Type to search

சினிமா

நடிகர் தனுஷ் ‘மொத ராத்திரி’ படக்குழுவை நேரில் அழைத்து பாராட்டினார்

Share

நடிகர் தனுஷ் ‘மொத ராத்திரி’ படக்குழுவை நேரில் அழைத்து பாராட்டினார். இயக்குநர் ராஜா கருப்பசாமி எழுத்து மற்றும் இயக்கத்தில் ரிஷிகாந்த், அனிஷ்மா அனில்குமார், சேத்​தன், ஏ.வெங்​கடேஷ், பானுப்​பிரியா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியானப் படம் மொத ராத்திரி. மைத்ரி மூவி மேக்​கர்ஸ் தயாரிப்பில் உருவான இப்படத்திற்கு பரத் சங்கர் இசையமைத்துள்ளார். ஆக.21ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் தற்போதுவரை நல்ல வரவேற்பை பெற்று ஓடிவருகிறது. விருப்பமே இல்லாத இருவர் ஒரு திருமண பந்தத்தில் இணைவதும், திருமண நாளன்று இரவு நடக்கும் நிகழ்வுகளே ‘மொத ராத்திரி’. இந்நிலையில் இப்படத்தின் இயக்குநர் ராஜா கருப்பசாமியை நேரில் அழைத்துப் பாராட்டியுள்ளார் நடிகர் தனுஷ். மேலும் படம் தொடர்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “மொத ராத்திரி மனதிற்கு இதமான ஒரு திரைப்படம். முதன்முறையாகப் பணியாற்றிய ஒரு குழுவினரின் இந்த அற்புதமான முயற்சியைப் பாராட்டியே ஆக வேண்டும். தயவுசெய்து உங்கள் குடும்பத்தினருடன் திரையரங்குகளில் இப்படத்தைப் பார்க்கும் வாய்ப்பைத் தவறவிடாதீர்கள்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.