LOADING

Type to search

சினிமா

விஜய் தேவரகொண்டா நடித்த ‘ரணபாலி’ பட முன்னோட்டம் வெளியானது

Share

விஜய் தேவரகொண்டாநடித்த ‘ரணபாலி’ பட முன்னோட்டம் வெளியானது. இயக்குநர் ராகுல் சங்கிருதயன் இயக்கத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளப் படம் ரணபாலி. 1876 முதல் 1878 வரையிலான ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில், தென்னிந்தியாவில் ஏற்பட்ட பஞ்சம் மற்றும் பிரிட்டிஷாரின் அடக்குமுறையால் உயிரிழந்த ஆயிரக்கணக்கான இந்தியர்கள் மற்றும் அவர்களுக்கு எதிரான போராட்டத்தை மையமாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகி உள்ள இப்படத்திற்கு அஜய் – அதுல் இசையமைத்துள்ளனர். தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளில் இப்படம் வரும் அக்டோபர் 16ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில் இப்படத்தின் முன்னோட்டம் வெளியாகி உள்ளது.