LOADING

Type to search

கனடா அரசியல்

செப்.25 முதல் 27 வரை ரொறன்ரோவில் நடைபெறவுள்ள ‘ரொறன்ரோ தமிழ் சர்வதேச திரைப்பட விழா’ குழுவினரால் விமான நிலையத்தில் வரவேற்கப்பட்ட இயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் ‘DOROTHY -டோரதி’ திரைப்படக் குழுவினர்

Share

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தலைமையில் கனடா வந்துள்ள ‘DOROTHY -டோரதி’ திரைப்படக் குழுவில் திரைப்படத்தின் கதாநாயகியானநட்சத்திர நடிகை கீர்த்தி சுரேஷ் உட்பட பலர் அடங்குகின்றனர்

எமது தாய் மண் உட்பட உலகின் பல நாடுகளில் வாழும் தமிழ் பேசும் திரைப்படக் கலைஞர்கள், இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் ‘ரொறன்ரோ தமிழ் சர்வதேச திரைப்பட விழா’ எதிர்வரும் செப்.25 முதல் 27 வரை ரொறன்ரோவில் நடைபெறவுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.

இதேவேளை ‘ரொறன்ரோ தமிழ் சர்வதேச திரைப்பட விழா’ குழுவினரால் 10ம் திகதி வியாழக்கிழமையன்று பியர்சன் விமான நிலையத்தில் வரவேற்கப்பட்ட பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தலைமையில் ‘DOROTHY -டோரதி’ திரைப்படக் குழுவினர் மிகுந்த உற்சாகத்தோடு காணப்பட்டார்கள்.

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தலைமையில் கனடா வந்துள்ள ‘DOROTHY -டோரதி’ திரைப்படக் குழுவில் திரைப்படத்தின் கதாநாயகியான

நட்சத்திர நடிகை கீர்த்தி சுரேஷ் உட்பட பலர் அடங்குகின்றனர். இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் அவர்களின் இயக்கத்தில் தயாராகியுள்ள ‘DOROTHY -டோரதி’ திரைப்படம் எதிர்வரும் செப்டம்பர் 10ம் திகதி தொடக்கம் 20ம் திகதி வரை நடைபெறவுள்ள 51வது Toronto International Film Festival இல் திரையிடப்படும் வாய்ப்பைப் பெற்றுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

எனவே ‘ரொறன்ரோ தமிழ் சர்வதேச திரைப்பட விழா’ இனது நிறுவனரும் தலைவருமான நண்பர் செந்தூரன் நடராஜா அவர்களின்; ஏற்பாட்டில் விழாக் குழுவினர் மற்றும் கனடா தமிழ் ஊடகவியலாளர்கள் விமான நிலையத்தில் ‘DOROTHY -டோரதி’ திரைப்படக் குழுவினரை வரவேற்றனர்.

மேற்படி’ரொறன்ரோ தமிழ் சர்வதேச திரைப்பட விழா’ குழுவில் ‘தேடிப்பார்’ புகழ் குமார், கிருத்திகா தயா, கஜன், மற்றும் தமிழர் பாதுகாப்பு நிறுவன அதிபர் யோகராஜா ஆகியோருடன் திரைப்படத் தயாரிப்பாளர் மதிவாசன் மற்றும் உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லோகேந்திரலிங்கம், யுகம் வானொலி கணபதி ரவீந்திரன். ஈசி 24 நியூஸ் கிருபா கிசான் மற்றும் ‘பிகைன்ட் மீ’ ஊடகர் நிரோஷ் உட்பட பலர் ஊடக நண்பர்களும் அங்கு சமூகமளித்து அந்த வரவேற்பு நிகழ்வை மேலும் சிறப்பித்தார்கள்.