LOADING

Type to search

சினிமா

ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் “நிஞ்சா” படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்தது

Share

முருகு இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், பிரார்த்தனா நாதன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘நிஞ்சா’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான ஜி.வி.பிரகாஷ் குமார் தொடர்ந்து பல்வேறு மொழிகளில் பெரிய படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இசையில் மட்டுமல்லாது நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘இம்மார்ட்டல்’ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வணிக ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. இதற்கிடையே, தெலுங்கு மற்றும் தமிழ்த் திரைப்படங்களுக்கு இசையமைத்தும் வருகிறார். ஜிவி பிரகாஷ். சமீபத்தில் ஜிவி பிரகாஷ் இசையமைத்த கென் கருணாஸ் இயக்கி நடித்த ‘யூத்’ படத்தின் பாடல்கள் வைரலானது. ‘ஜோ’ திரைப்படம் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் ஹரிஹரன் ராம் இயக்கும் புதிய படத்தில் ஜி.வி.பிரகாஷ் கிரிக்கெட் வீரராக நடிக்கவுள்ளார்.

இயக்குநர் முருகு இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் கதாநாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘நிஞ்சா’ என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் மூலம் ஜி.வி.பிரகாஷ் மீண்டும் கதாநாயகனாக புதிய கதைக்களத்தில் களமிறங்குகிறார். ‘நிஞ்சா’ திரைப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமாருடன் பாரத் மற்றும் பிரார்த்தனா நாதன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். பிராத்தனா நாதன் ‘பார்க்கிங்’ மற்றும் ‘தலைவர் தம்பி தலைமையில்’ படங்களில் நடித்துள்ளார். இப்படத்திற்கு இசையமைப்பாளராக ஷான் ரோல்டன் பணியாற்றுகிறார். இப்படத்தை சினிஷ் மற்றும் லேஅர்ன் அண்ட் டீச் புரோடக்சன் தயாரிக்கவுள்ளது.