LOADING

Type to search

உலக அரசியல்

தென் ஆப்பிரிக்காவில் அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்தில்- 21 பேர் உயிரிழந்தனர்

Share

தென் ஆப்பிரிக்காவில் அடுத்தடுத்து வாகனங்கள் மோதி நடந்த விபத்தில் 21 பேர் உயிரிழந்தனர். ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு தென் ஆப்பிரிக்கா. இந்நாட்டின் மேற்கு கேப் மாகாணம் பிரின்ஸ் ஆல்பர்ட் மற்றும் லியு கம்கா நகர் இடையே தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இந்த நெடுஞ்சாலையில் நேற்று இரவு சென்றுகொண்டிருந்த பேருந்து எதிரேவந்த மற்றொரு பேருந்து மீது

மோதியது. இதையடுத்து, சாலையில் பின்னால் வந்த மற்ற வாகனங்களும் அடுத்தடுத்து மோதி தொடர் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 21 பேர் உயிரிழந்தனர். மேலும், 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.