LOADING

Type to search

உலக அரசியல்

சூடானில் தங்கச்சுரங்கம் இடிந்து விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர்

Share

சூடானில் தங்கச்சுரங்கம் இடிந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 11 பேர் உயிரிழந்தனர். வடக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு சூடான். இந்நாட்டில் பல்வேறு தங்கச்சுரங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் பல தங்கச்சுரங்கங்கள் சட்டவிரோதமாக செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், அந்நாட்டின் வடகிழக்கே அமைந்துள்ள செங்கடல் மாகாணம் ஒனி நகரில் தங்கச்சுரங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த தங்க சுரங்கத்தில் நேற்று 40க்கும் மேற்பட்டோர் தங்கத்தை வெட்டி எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தங்க சுரங்கத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் 11 பேர் உயிரிழந்தனர். 30 பேர் படுகாயங்களுடன் உயிர் பிழைத்தனர். மேலும், சுரங்கத்திற்குள் மேலும் சிலர் சிக்கிக்கொண்டனர். தகவலறிந்து விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் தொடர்ந்து மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.