“ராமாயணா” படம் நவம்பர் 6ம் தேதி வெளியாகிறது
Share
ராமாயணா’ திரைப்படத்தின் முதல் பாகம் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 6ம் தேதி வெளியாகிறது. ‘ராமாயணா’ திரைப்படத்தின் முன்னோட்டம் கடந்த ஜூலை 30ம் தேதி காலை வெளியானது. பிரமாண்ட விஷுவல் எபெக்ட்ஸ், வலுவான பின்னணி இசை, கதாபாத்திரங்களின் தோற்றம் மற்றும் காட்சியமைப்புகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. டிரெய்லர் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், ‘ராமாயணா’ திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் பல மடங்கு அதிகரித்துள்ளது. முன்னோட்டத்தின் முதல் காட்சியே ராவணனான யாஷ், எப்படி அரசனாக மாறினார் எனக் காட்டப்பட்டு பின் ராமனை அறிமுகம் செய்கின்றனர். நேரடியாக இந்தியில் எடுக்கப்பட்ட இப்படம் மற்ற பான் இந்திய மொழிகளிலும் பின்னணி செய்யப்பட்டுள்ளது.
‘ராமாயணா’ திரைப்படத்தின் முன்னோட்டம் யூடியூப் உள்பட அனைத்து சமூக ஊடகங்கள் வாயிலாக 100 கோடி (1 பில்லியன்) பார்வைகளைக் கடந்ததாகத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது.
இந்நிலையில், ரன்பீர் கபூர், சாய் பல்லவி நடிக்கும் ‘ராமாயணா’ படத்தின் “ஜெய் ஜெய் ராம்” பாடலின் தமிழ் பதிப்பு சமீபத்தில் வெளியானது. கார்த்திக் நேத்தா எழுதியுள்ள தமிழ் வரிகளுக்கு, பாடகி சின்மயி, ஹரிசரண் இணைந்து பாடியுள்ளனர். விநாயகர் சதுர்த்தியன்று இப்பாடலின் இந்தி பதிப்பு வெளியானது. ரன்பீர் கபூர் ராமனாகவும் சாய் பல்லவி சீதையாகவும் நடிக்கும் ‘ராமாயணா’ படத்தில் ராவணனாக உருவெடுத்துள்ள யாஷின் அதிகாரப்பூர்வ பதாகையை படக்குழு வெளியிட்டுள்ளது. தங்க ஆபரணங்களுடன் யாஷின் மிரட்டலான பார்வை எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. இப்படத்தின் முதல் பாகம் 2026 நவம்பர் 6ம் தேதி திரைக்கு வருகிறது.















