LOADING

Type to search

இந்திய அரசியல்

‘தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் வெறும் பரிசு அல்ல… அன்பின் அடையாளமென கனிமொழி சந்தோஷ் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்

Share

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் என்பது வெறும் பரிசு அல்ல, அது அன்பின் அடையாளமென கவுண்டம்பாளையம் த.வெ.க. எம்.எல்.ஏ. கனிமொழி சந்தோஷ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ‘எக்ஸ்’ தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது; “தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்! ஒரு குழந்தை பிறக்கும் தருணம்… அது ஒரு குடும்பத்திற்கு கிடைக்கும் புதிய நம்பிக்கையின் தொடக்கம். அந்த பிஞ்சுக் குழந்தையின் விரலைப் பிடித்து, அதன் வாழ்வின் முதல் நினைவாக ஒரு தங்க மோதிரத்தை அணிவிப்பது… வெறும் பரிசல்ல; “இந்தக் குழந்தை எங்கள் குடும்பத்தின் செல்வம்” என்று சொல்லும் அன்பின் அடையாளம்! அந்த மகிழ்ச்சித் தருணத்தை இன்னும் சிறப்பாக்கும் வகையில், தாய்மாமன் உறவின் பாசத்தையும், குடும்ப உறவுகளின் உணர்வுகளையும் புரிந்துகொண்டு, பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கும் இத்திட்டத்தை முன்னெடுக்கும் தமிழ்நாடு முதல்-அமைச்சர் சி.ஜோசப் விஜய்யின் மக்கள் நல சிந்தனை உண்மையிலேயே பாராட்டுக்குரியது. மக்களின் தேவையை மட்டும் பார்க்காமல், அவர்களின் உணர்வுகளையும் புரிந்துகொண்டு செயல்படுவதுதான் ஒரு நல்லாட்சியின் அடையாளம். அந்த வகையில், ஒரு குழந்தையின் பிறப்பில் ஒரு குடும்பம் காணும் சந்தோஷத்திலும் பாசத்திலும் அரசையும் இணைக்கும் இந்த முயற்சி, மக்களோடு மனதளவில் இணைந்த தலைமைத்துவத்தின் அழகான வெளிப்பாடாகும்.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.