LOADING

Type to search

இந்திய அரசியல்

பகத்சிங் பிறந்தநாளில் நயினார் நாகேந்திரன் புகழாரம் சூட்டினார்

Share

பகத்சிங் பிறந்தநாளில் அவரது வீரமும் அர்ப்பணிப்பும் வருங்கால தலைமுறையினருக்கு என்றும் உத்வேகமாகத் திகழட்டுமென நயினார் நாகேந்திரன் புகழாரம் சூட்டினார். இது குறித்து பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது; பாரதத் தாயின் விடுதலைக்காக இளம் வயதிலேயே தனது வாழ்வை அர்ப்பணித்து, அச்சமற்ற தேசப்பற்று மற்றும் தியாகத்தின் அடையாளமாகத் திகழ்ந்த மாவீரர் பகத்சிங் அவர்களின் பிறந்த தினம் இன்று. அடிமைத்தனத்திற்கு எதிராகத் துணிச்சலுடன் குரல் எழுப்பிய பகத்சிங், இளைஞர்களிடையே தேசப்பற்று, தன்னம்பிக்கை மற்றும் சமூக அக்கறையை விதைத்த மகத்தான புரட்சியாளராக வரலாற்றில் என்றும் நினைவுகூரப்படுகிறார். தேசத்தின் விடுதலைக்காக தன்னையே அர்ப்பணித்த பகத்சிங் தியாகத்தையும், தேசப்பற்று நிறைந்த வாழ்க்கையையும் இந்நாளில் போற்றி வணங்குவோம். அவரது வீரமும் அர்ப்பணிப்பும் வருங்கால தலைமுறையினருக்கு என்றும் உத்வேகமாகத் திகழட்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.