LOADING

Type to search

சினிமா

‘மொத ராத்திரி’ படத்தை நடிகர் மாதவன் பாராட்டினார்

Share

நீண்ட காலத்திற்குப் பிறகு வாய்விட்டு சிரித்ததுடன், ரசித்துக் கைதட்டவும் செய்தேன்.  ‘மொத ராத்திரி’ படத்தில் பணியாற்றிய நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்ட ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள். என மாதவன் பாராட்டியுள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள தமிழ் திரைப்படம் ‘மொத ராத்திரி’. ராஜா கருப்பசாமி இயக்கியுள்ள இப்படத்தில் ரிஷிகாந்த் கதாநாயகனாகவும், அனிஷ்மா கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். பரத் ஷங்கர் இசையமைத்துள்ளார். ‘குட் பேட் அக்லி’, ‘டியூட்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் மூன்றாவது தமிழ் திரைப்படம் ‘மொத ராத்திரி’ ஆகும். இப்படம் கடந்த ஆகஸ்ட் 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

புதிதாகத் திருமணமான ஒரு ஜோடியின் வாழ்க்கையில் நடைபெறும் காதல் மற்றும் நகைச்சுவை சம்பவங்களை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. திரையரங்குகளில் வெளியானபோது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற ‘மொத ராத்திரி’, தற்போது ஓடிடி தளத்திலும் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. படத்தைப் பார்த்த திரைப்பிரபலங்கள், படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டி வருகின்றனர். அந்த வகையில், நடிகர் மாதவன் ‘மொத ராத்திரி’ திரைப்படத்தை நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் பார்த்து பாராட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு தமிழ் திரைப்படத்தைப் பார்த்து மிகவும் ரசித்தேன். ‘மொத ராத்திரி’ படத்தின் திரைக்கதை, கண்களைக் கவரும் விஷுவல் கதை சொல்லல் மற்றும் நடிப்பு மிகவும் அற்புதமாக இருந்தது. நீண்ட காலத்திற்குப் பிறகு வாய்விட்டு சிரித்ததுடன், ரசித்துக் கைதட்டவும் செய்தேன். இப்படத்தில் பணியாற்றிய நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்ட ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள். உங்களுக்கு எழுந்து நின்று கைதட்டும் மரியாதையை சமர்ப்பிக்கிறேன். இந்தப் படம் அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய ஒன்று” என மாதவன் பாராட்டியுள்ளார்.