எலான் மஸ்க் குற்றச்சாட்டு ஆதாரமற்றதென மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது
Share
எலான் மஸ்க் குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. இந்தியாவில் 11,256 கிராமங்களில் 4ஜி சேவை இல்லாததாக வெளியான தகவலைத் தொடர்ந்து, ஸ்டார்லிங்க் இந்தியாவில் அறிமுகமாவதற்கு சில சக்திவாய்ந்தவர்கள் தடையாக இருப்பதாக எலான் மஸ்க் குற்றம்சாட்டியுள்ளார். தங்களது ஏகபோக ஆதிக்கத்தைத் தக்கவைத்துக்கொள்ளவே ஸ்டார்லிங்க் சேவை தடுக்கப்படுவதாகக் கூறிய மஸ்க், இதை இந்திய மக்களுக்கு இழைக்கப்படும் குற்றம் என்றும் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்தநிலையில், 66 ஸ்டார்லிங்க் இந்தியாவில் செயல்பட சில பெருமுதலாளிகள் தடையாக இருப்பதாக எலான் மஸ்க் குற்றம்சாட்டியிருந்த நிலையில், இது தொடர்பாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. அதில், எலான் மஸ்க் குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது. இந்தியாவில் செயற்கைக்கோள் இணைய சேவைகளுக்கு பாரபட்சமற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 3 நிறுவனங்களுக்கு செயற்கைக்கோள் இணைய சேவைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. “அனைத்து செயற்கைக்கோள் தகவல் தொடர்பு சேவைகளுக்கும் நியாயமான, பாகுபாடற்ற விதிமுறைகளே பின்பற்றப்படுகின்றன. ஸ்டார்லிங்க் உள்ளிட்ட 3 நிறுவனங்களுக்கும் உரிமம் வழங்கப்பட்டுள்ள நிலையில், பாதுகாப்பு மதிப்பீடு முடிந்ததும் அலைக்கற்றை ஒதுக்கீட்டுக்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஸ்டார்லிங்க் சேவையை வரவிடாமல் சில நிறுவனங்கள் தடுக்கின்றன என்ற எலான் மஸ்க் குற்றச்சாட்டிற்கு மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.















