LOADING

Type to search

உலக அரசியல்

சவுதி அரேபியா மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதலில் 3 பேர் உயிரிழந்தனர்

Share

சவுதி அரேபியாவில் உள்ள சர்வதேச விமான நிலையம் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் 3 பேர் உயிரிழந்தனர். ஏமனில் அரசுப்படையினருக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. இந்த உள்நாட்டுப்போரில் அரசுப்படையினருக்கு சவுதி அரேபியாவும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரானும் ஆதரவு அளித்து வருகின்றன. ஈரான், சவுதி அரேபியா இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வரும் நிலையில் ஏமனில் இரு நாடுகளும் மறைமுக மோதலில் ஈடுபட்டு வருகின்றன.

இதனிடையே, ஏமனில் உள்நாட்டுப்போர் கடந்த சில வாரங்களாக தீவிரமடைந்து வருகிறது. அரசுப்படையினரும், ஹவுதி கிளர்ச்சியாளர்களும் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த மோதலின்போது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அவ்வப்போது சவுதி அரேபியா மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலுக்கு சவுதி தலைமையிலான கூட்டுப்படையினர் பதிலடி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனிடையே, சவுதி அரேபியா மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கடந்த புதன்கிழமை ஏவுகணை தாக்குதல் நடத்தினர். சவுதி தலைநகர் ரியாத்தில் உள்ள கிங் கலீத் சர்வதேச விமான நிலையத்தை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த விவரம் உடனடியாக வெளியாகவில்லை.

இந்நிலையில், கிங் கலீத் சர்வதேச விமான நிலையம் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 3 பேர் உயிரிழந்ததாக சவுதி அரேபியா தெரிவித்துள்ளது. விமான கேப்டன் உள்பட 3 பேர் உயிரிழந்ததாக சவுதி அரேபியா தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலில் உள்நாடு, வெளிநாடுகளை சேர்ந்த பயணிகள் பலர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.