இங்கிலாந்து வர்த்தக குழு இந்தியா வந்துள்ளதால் ரூ.13 ஆயிரம் கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது
Share
இங்கிலாந்து வர்த்தக குழு இந்தியா வந்துள்ளதால் ரூ.13 ஆயிரம் கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது. இந்தியாவுக்கும், இங்கிலாந்துக்கும் இடையே நீண்ட நாட்களாக பேச்சுவார்த்தையில் இருந்த விரிவான பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தம்), கடந்த ஜூலை 15-ந்தேதி அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வந்தது. 14 சுற்றுகளாக நடத்தப்பட்ட தீவிரப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவு எட்டப்பட்டது. இந்த ஒப்பந்தம் செயல்படுத்தப்பட்டு சுமார் 3 மாதங்களுக்குப் பின், இங்கிலாந்தில் இருந்து ‘கிரேட் நார்த் மிஷன்’ என்ற பெயரில் வர்த்தக குழுவினர் இந்தியா வந்துள்ளனர். இருதரப்பு தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தின் மூலம் கிடைக்கும் பலன்களை அதிகப்படுத்தும் நோக்குடன் இங்கிலாந்து குழுவினர் இந்தியா வந்துள்ள நிலையில், 1 பில்லியன் பவுண்டுகள்(சுமார் ரூ.13 ஆயிரம் கோடி) மதிப்புள்ள புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளதாக இங்கிலாந்து அரசு தெரிவித்துள்ளது.















