LOADING

Type to search

இந்திய அரசியல்

வெயிலின் தாக்கம் குறையாததால் தமிழ்நாட்டுக்கான மின் தேவை அதிகமாக உள்ளதாக அமைச்சர் நிர்மல் குமார் கூறியுள்ளார்

Share

வெயிலின் தாக்கம் குறையாததால் தமிழ்நாட்டுக்கான மின் தேவை அதிகமாக உள்ளதாக அமைச்சர் நிர்மல் குமார் கூறியுள்ளார். இது தொடர்பாக மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல்குமார் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது: வெயிலின் தாக்கம் குறையாததால் தமிழ்நாட்டுக்கான மின் தேவை அதிகமாக உள்ளது. மத்திய மின் தொகுதிப்பில் போதிய மின்சாரம் இல்லாததால் வெளிச்சந்தையில் கொள்முதல் செய்யப்படுகிறது. பீக் ஹவர்சில் தேவையை பூர்த்தி செய்ய மின்சாரம் கொள்முதல் செய்ய டெண்டர் கோரியுள்ளோம். பீக் ஹவர்ஸ் மின் தேவையை சமாளிக்கவே ரூ.35க்கு மின்சாரம் கொள்முதல் செய்யப்பட உள்ளது. மத்திய தொகுதிப்பில் மின்சாரம் கிடைக்காததால் அதிக விலைக்கு வாங்க வேண்டிய நிலை உள்ளது. மின் தேவை கூடுதலாக 30 சதவீதம் அதிகரித்துள்ளதால் மின்சாரம் கொள்முதல் செய்ய டெண்டர் கோரியுள்ளோம். காற்றாலை மூலம் 3,000 மெகாவாட் வரை மின்சாரம் தமிழ்நாட்டுக்கு கிடைக்கவில்லை.என்.எல்.சி.யில் இருந்து வர வேண்டிய 1,800 மெகாவாட் மின்சாரமும் கிடைக்கவில்லை. அசாமில் இருந்து 430 மெகாவாட் மின்சாரத்தை ஏற்கனவே கொள்முதல் செய்துவிட்டோம். ரூ.35க்கு மின்சாரம் கொள்முதல் செய்வதன் மூலம் தினமும் ரூ.5 கோடி செலவு ஏற்படுகிறது. வாங்கும் மின்சாரத்தை மாலை 6 மணி முதல் இரவு 12 மணி வரை மட்டும்தான் பயன்படுத்துவோம். செந்தில் பாலாஜி தன் மீதான வழக்கை மட்டுமே பார்த்தார். தான் சார்ந்த துறையை பார்க்கவில்லை. திமுக ஆட்சியில் தமிழ்நாட்டின் மின் உற்பத்தி 50 % இருந்தது. தற்போது 75 % வரை அதிகரித்துள்ளோம். ரூ.35க்கு கொள்முதல் செய்யும் 1,500 மெ.வாட் மின்சாரம் பீக் ஹவர்ஸ் பயன்பாட்டுக்கு மட்டுமே வினியோகம் செய்யப்படும். 3,500 மெகாவாட் மின்சாரத்திற்கு டெண்டர் வெளியிட்டாலும் 1,500 மெகாவாட் மட்டுமே வாங்க உள்ளோம்.

அக்.15 முதல் அக்.31 வரையிலான காலகட்டத்திற்கு மட்டுமே இந்த மின்சாரம் பயன்படுத்தப்படும். மின் தேவை அதிகரிப்பு காரணமாக குறுகிய கால டெண்டர் விடப்பட்டுள்ளது. அதிகவிலை கொடுத்து மின்சாரம் வாங்கவில்லை எனில் 2 அல்லது 3 மணி நேரம் மின்வெட்டு ஏற்படும். வெயிலின் தாக்கம் குறையாததால் தமிழ்நாட்டுக்கான மின் தேவை அதிகமாக உள்ளது. திமுக ஆட்சியில் நீண்டகால செயல்திட்டங்கள் எதையும் செயல்படுத்தாததால் இவ்வளவு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.