LOADING

Type to search

இலங்கை அரசியல்

கிளிநொச்சி வடக்கு கல்வி வலயத்தில் முன்பள்ளிகளின் மாதாந்த முழுநிலா நாள் நிகழ்வு

Share

அனைத்துலக மருத்துவநல அமைப்பு, மற்றும் றட்ணம் பவுண்டேசன் அனுசரணையில் கிளிநொச்சி வடக்கு கல்விவலயம், ஆரம்ப முன்பிள்ளைப்பருவ அபிவிருத்திப் பிரிவின் ” முழு நிலா நாள் ” றங்கன் முன்பள்ளிக் கொத்தணியில் றங்கன் முன்பள்ளியின் முன்றலில் 08.02.2023 காலை 9.00 மணிக்கு நடைபெற்ற இரண்டாவது முழு நிலா நாள் விழா மிகவும் சிறப்புற நடைபெற்றது.

நிகழ்ச்சி நிரலில் உள்ள விருந்தினர் கலந்து விழா பற்றியும் பெற்றோர் பெருந்திரளாக வருகை தந்திருந்தமை பற்றியும் அவர்களின் விழிப்புணர்வு பற்றியும் கருத்துரைக்கப்பட்டது இதற்காக IMHO, மற்றும் றட்ணம் பவுண்டேசன் நிறுவனங்களின் அற்பணிப்பான கொடை உதவி இப்பிரதேசத்தின் வரப்பிரசாதம் , அவர்களுக்கு வாழ்த்துக்கள் கூறுவதாக விருந்தினர்கள் உரைத்தனர். இப்பகுதி மக்கள் வறுமையில் மிக நலிவடைந்தவர்கள்.

300 க்கு மேற்பட்டவர்கள் வருகை தந்திருந்தனர். அவர்கள் தம் நெருங்கிய உறவுகளின் திருமண வீட்டுக்கு வருவது போல வந்திருந்தனர். இம் மக்களின் பெரும் வரவேற்பை பெற்ற இவ் முழு நிலா நாள் நிகழ்வில் அரங்கநிகழ்வுகளாக குழந்தைகளின் கலைநிகழ்வுகள், ஆசிரியர்களின் கலைநிகழ்வுகள் சிறப்பாக பயிற்றுவிக்கப்பட்டு அரங்கம் ஏறியன. இறுதியாக 12.30 மணிக்கு நன்றியுரையுடன் பெற்றோர்கள் ஆசிரியர்களின் முற்றத்து ஆடல் பாடலுடன் இனிதாக நிறைவேறியது.