LOADING

Type to search

இலங்கை அரசியல்

சாவகச்சேரி கோவிலாக்கண்டி பிரதேசத்தில் கடற்கரையை சுத்தப்படுத்தலும் மரம் நடுதல் நிகழ்வும்

Share

பு.கஜிந்தன்

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி பிரதேச செயலகமும், யாழ்ப்பாணம் கரிதாஸ் கியூடெக் நிறுவனமும் இணைந்து முன்னெடுத்த கடற்கரை சுத்தப்படுத்தலும், மரம் நடுகையும் சாவகச்சேரி கோவிலாக்கண்டி பிரதேசத்தில் இன்று (29) இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் கரிதாஸ் கியூடெக் நிறுவன இயக்குனர் அருட் தந்தை இயூஜின் பிரான்சிஸ், சாவகச்சேரி பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் சர்வேஸ்வரன், சாவகச்சேரி பங்குத் தந்தை ஞானரூபன் ஆகியோர் விருந்தினர்களாக கலந்து சிறப்பித்தனர்.

இந்த கடற்கரை சுத்தப்படுத்தும் பணியில் கோவிலாகண்டி மீனவர் சங்கம், கோவிலாக்காண்டி மாதர் சங்கம் உள்ளிட்ட பொது அமைப்புகள் கலந்து கொண்டதோடு பாடசாலை மாணவர்கள் கலந்து கொண்டு மரக் கன்றுகளை நாட்டி வைத்தனர்.