இலங்கையின் முன்னாள் சபாநாயகர் கருஜெய சூரிய யாழ்ப்பாண விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்
Share
இலங்கையின் முன்னாள் சபாநாயகர் கருஜெய சூரிய இன்று யாழ்ப்பாண மாவட்டத்திற்கான உத்தியபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
காலை தொடக்கம் மதியம் வரை மானிப்பாய் சுதுமலையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற இரண்டாம் மொழி கற்கை நெறியினை பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டார். பின்னர் பிற்பகல் 04.00 மணியளவில் நல்லூர் கந்தசாமி ஆலயத்திற்கு வருகைதந்ததுடன் அங்கு இடம்பெற்ற விஷேட பூஜைகளில் கலந்துகொண்டார்.
பின்னர் யாழ்ப்பாணம் ஸ்ரீ நாகவிகாரை மத்தியஸ்தானத்தின் விகாரைக்கு சென்றதுடன் ஸ்ரீ நாகவிகாராதிபதி ஸ்ரீ விமலரத்தன தேரோவினை சந்தித்து கலந்துறையாடியுள்ளார்.
இதில் வடமாகாண பிரதம செயலாளர் சமன் பந்துலசேன, யாழ்ப்பாண மாநகர ஆணையாளர் வ.ஜெயசீலன் ஆகியோர் கலந்துகொண்டனர்.




















