LOADING

Type to search

இலங்கை அரசியல்

வவுணதீவில் போதை பொருள் வியாபாரியின் வீடடை பொலிசார் முற்றுகை -ஓரு கிலோ 565 கிராம் கஞ்சாவுடன் பெண் கைது

Share

(கனகராசா சரவணன்)

மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் பிரிவில் உள்ள 10 ம்கட்டை பிரதேசத்தில் போதை பொருள் வியாபாரி ஒருவரின் வீடை முற்றுகையிட்ட பொலிசார் ஓரு கிலோ 565 கிராம் கஞ்சாவுடன் பெண் வியாபாரி ஒருவரை நேற்று வியாழக்கிழமை (21) மாலையில் கைது செய்துள்ளதாக மாவட்ட குற்ற விசாரணை பிரிவு பொலிசார் தெரிவித்தனர்.

மாவட்ட குற்ற விசாரணை பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அமல் ஏ.எதிரிமானவின் ஆலோசனைக்கமைய மாவட்ட குற்ற விசாரணை பிரிவு பொறுப்பதிகரி டி.எஸ்.எஸ்.கே. தெலங்காவலகே; தலைமையிலான உதவி பொலிஸ் பரிசோதகர் எம.எம்.ஏ.ஷகி மற்றும் பொலிஸ் குழுவினர் சம்பவதிமான நேற்று மாலை குறித்த வியாபாரியின் வீட்டை முற்றுகையிட்டு சோதனை நடாத்தினர்.

இதன்போது அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த ஓரு கிலோ 565 கிராம் கஞ்சாவை மீட்டதுடன் கஞ்சா வியாபாரியான பெண் ஒருவரை கைது செய்ததுடன் அவரை விசாரணையின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.