LOADING

Type to search

இலங்கை அரசியல்

”யாழ்ப்பாணத்திலிருந்து இரகசியமாக சுன்னக்கல் அகழ்ந்து கடத்தப்படுகிறது” சிவஞானம் சிறிதரன் குற்றச்சாட்டு

Share

நடராசா லோகதயாளன்

யாழ்ப்பாணத்தில் இருந்து தற்போதும் சுன்னக்கல் அகழப்பட்டு இரகசியமான முறையில் திருட்டுத்தனமாக திருகோணமலைக்கு எடுத்துச் செல்லப்படுவதாக தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இணைத் தலைவர்களான வடக்கு ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானாந்தா ஆகியோர் தலைமையில் 18-04-2024 வியாழனன்று இடம்பெற்ற சமயமே இதனைத் தெரிவித்ரார்.

காங்கேசனதுறையில் இயங்கிய சீமேந்து ஆலைக்காக சுன்னக்கல் அகழ்ந்த பிரதேசங்களான காங்கேசன்துறை, பலாலி தெற்கு ஆகிய பகுதிகளில் உள்ள பாரிய இரு குழிகளும் இன்றுவரை மூடமுடியாமல் ஆபத்தான நிலையில் குடிமனைகளின் நடுவே உள்ளது.

இந்த நிலையில் தற்போது
புத்தூர், மாதகல்- இளவாளைப் பகுதிகளில் சிலர் இரகசியமான முறைகளில் சுன்னக்கல் அகழப்பட்டு மூடிய பார ஊர்திகளில் எடுத்துச் செல்லப்படுகின்றது.

இவ்வாறு மூடிய பார ஊர்திகளில் தினமும்10 முதல் 15 வரையான பார ஊர்தி கற்கள் திருகோணமலைக்கு எடுத்துச் செல்லப்படுவதற்கு எந்த திணைக்களமாவது அனுமதி வழங்கியதா எனவும் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த புவிச் சரிதவியல்த் திணைக்களத்தைச் சேர்ந்த மயூரன் பதிலளிக்கையில அவ்வாறான எந்தவொரு அனுமதியும் வழங்கப்படவில்லை எனப் பதிலளித்தார்.