நெல்லியடி நகரில் முள்ளிவாய்க்கால் கஞ்சி!
Share
முள்ளிவாய்க்கால் இனப் படுகொலை வாரம் ஆரம்பத்தை முன்னிட்டு இலங்கை தமிழரசு கட்சியினரால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு 11-05-2024 ன்று காலை 9:30 மணியளவில் இலங்கை தமிழரசு கட்சி பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தலமையில் இடம்பெற்றது.
நெல்லியடி பேருந்து நிலையத்தின் அருகில் முள்ளிவாயக்கால் கஞ்சி காய்ச்சப்பட்டு பயணிகள், வர்த்தகர்கள், பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் இலங்கை தமிழரசு கட்சி முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சந்திரலிங்கம் சுகிர்தன், தமிழரசு கட்சி பருத்தித்துறை தொகுதி நிர்வாகிகளான பிரசாத், தயாபரன், உட்பட தமிழரசு கட்சி உறுப்பினர்கள் கலந்துகொண்டிருந்தனர்.