LOADING

Type to search

இலங்கை அரசியல்

பொருளாதார நெருக்கடி காரணமாக தமிழகம் நோக்கி தொடர்ந்து பயணிக்கும் தமிழர்கள்

Share

நடராசா லோகதயாளன்

இலங்கையில் இருந்து படகு மூலம் ஆறுபேர் தமிழகத்திற்குச் சென்று அகதிகளாகச் தஞ்சம் அடைந்துள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டம் திருமுறுகண்டிப் பகுதியைச் சேர்ந்த ஓரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறுபேரே இவ்வாறு தமிழகத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக வாழ முடியாத சூழ்நிலை கருதியே தாம் தமிழகம் வந்ததாக இலங்கையில் இருந்து தப்பிச் சென்றவர்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு தமிழகம் சென்றவர்களில் தாய், தந்தை, 3 சிறுமிகள் மற்றும் ஒரு சிறுவனும் அடங்களாகவே ஆறுபேர் கடல் வழியாகப் பயணித்துள்ளனர்.

இவ்வாறு பயணித்த ஈழ அகதிகளை தமிழகப் பொலிஸார் விசாரணை செய்து வருகின்றனர்.