யாழ்ப்பாணத்தில் கனடா துணைத் தூதரகத்தை திறக்க இந்து மதத்தலைவர்கள் வேண்டுகோள்
Share
நடராசா லோகதயாளன்
கனடா துணைத்தூதரகத்தை வடக்கில் நிறுவி,மக்களுக்கு உதவவேண்டும் என நல்லை ஆதீனம் மற்றும் ஆறு.திருமுருகன் ஆகியோர் கனேடியத் தூதுவரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கனடா நாட்டுத்தூதுவர் இந்துசமயத் தலைவர்களை நல்லை திருஞான சம்பந்தர் ஆதீனத்தில் நேற்று சந்தித்து கலந்ருரையாடினார் இதன்போதே மேற்படி கோரிக்கை முன் வைக்கப்பட்டது.
இதன்போது நல்லை ஆதீன முதல்வர் ஶ்ரீலஶ்ரீ சோமசந்தர ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள்,செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு.திருமுருகன், ஆன்மீகச்சுடர் ரிஷி தொண்டுநாதன் சுவாமிகள் ஆகியோருடன் நாட்டின் இன்றைய சூழ்நிலை தொடர்பாக கலந்துரையாடினார்.
நல்லை ஆதீன முதல்வர் கனடாநாட்டில் வாழும் எம்மக்களைக் கௌரவமாக அங்கு வழிநடத்துவதற்கு நன்றி கூறியதோடு இந்த நாட்டில் நிலவும் இனப்பிரச்சனைத் தீர்வு தொடர்பாக கனடா நாடு இலங்கை அரசுடன் பேசவேண்டும் என்பதனை வலியுறுத்தினர்.
கனடா துணைத்தூதரகத்தை வடக்கில் நிறுவி,மக்களுக்கு உதவவேண்டும் எனவும்,கனடா தூதுவராலய விசா அலுவலகம் வடக்குப் பகுதியில அமையவேண்டிய அவசியத்தையும் விளக்கினர்.தொடர்ந்து போரில் இறந்தவர்களுக்கு மனிதநேய அடிப்படையில் வழிபாடு செய்யும் உரிமையினையும் எடுத்துரைத்தனர்