LOADING

Type to search

கனடா அரசியல்

இவ்வருடத்திற்கான வெண்மேரி விருதுகள் விழா கனடாவில் நடைபெறுகின்றது

Share

கடந்த இரண்டு வருடங்களாக முறையே யாழ்ப்பாணம் மற்றும் பாரிஸ் ஆகிய நகரங்களில் நடைபெற்ற கனடாவை தளமாகக் கொண்ட வெண்மேரி விருதுகள் வழங்கும் இவ்வருடத்திற்கான 3வது விருது விழா கனடாவின் அஜக்ஸ் மாநகரில் நடைபெறுகின்றது. எல்லாமாக 19 விருதுகள் வழங்கப்பெறவுள்ள இந்த விழாவில் மூன்று பெண்மணிகள் விருதுகள் பெறுகின்றார்கள்.

கனடா வாழ் நடன ஆசிரியை சாந்தா பொன்னுத்துரை அவர்களுக்கு ‘கலாபவனம்’ ஏரம்பு சுப்பையா ஞாபகார்த்த விருதும், இலங்கையின் முல்லைத்தீவு வாழ் ஓட்ட வீராங்கனை அகிலத்திருநாயதி ஶ்ரீ சயனணந்தபவன் அவர்களுக்கு முன்னாள்ன இலங்கை தேசிய உதைப்பந்தாட்ட வீரர் அந் எஸ். என். ஜே அந்தோனிப்பிள்ளை ஞாபகார்த்த விருதும். ஜேர்மனி வாழ் திரைப்பட இயக்குனர் சிபோ சிவகுமாரன் அவர்களுக்கு மூத்த திரைப்படக் கலைஞர் ஏ. ரகுநாதன் ஞாபகார்த்த விருதும் வழங்கப்படவுள்ளன. ஈழத்தின் கர்நாடக இசையின் அடையாளம் என்று கருதப்படுபவரும் தற்போது கனடாவில் வாழ்பவருமான ‘இன்னிசை வேந்தர்’ பொன். சுந்தரலிங்கம் அவதர்களுக்கு இசைப் புலவர் தா. சண்முகரத்தினம் ஞாபகார்த்த விருதும் வழங்கப்படவுள்ளது.

கனடாவில் நடைபெறும் விருது விழா தொடர்பான ஏற்பாடுகளை கனடா வாழ் உறுப்பினர் அனுரா அருளப்பு அவர்கள் செய்து வருகின்றார்.

மேலதிக விபரங்களுக்கு 647 854 2927 என்னும் இலக்கத்தை அழைக்கவும்.