LOADING

Type to search

இலங்கை அரசியல்

பணத்தை காலால் மிதித்த வர்த்தகருக்கு விசாரணை – கொழும்பிலிருந்து வந்தது உத்தரவு!

Share

பு.கஜிந்தன்

பணத்தை காலால் மிதித்த வர்த்தகருக்கு விசாரணை – கொழும்பிலிருந்து வந்த உத்தரவு மேற்படி வர்த்தகரை யாழ்ப்பாணம் பொலிஸ்நிலையத்துக்கு அழைத்து விசாரணை நடத்தும் அளவிற்கு கொண்டு சென்றுள்ள என எமது யாழ்ப்பாணச் செய்தியாளர் அறிவித்துள்ளார். அவரிடம் வாக்குமூலமும் பெறப்பட்டுள்ளது.

பிரபல வர்த்தகர் ஒருவரான தியாகி என்பவர் பணத்தை காலால் மிதிக்கும் வீடியோ பதிவுகள் அண்மையில் சமூக ஊடகங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், அது தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பொலிஸ் தலைமையகத்தில் இருந்து வழங்கப்பட்ட உத்தரவுக்கு அமைய, யாழ்ப்பாணப்பொலிஸ் பிராந்தியத்தின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரான ஜெகத் விஷாந்த தலைமையிலான குழுவினரால் மேற்படி வர்த்தகர் யாழ்ப்பாணம் பொலிஸ்நிலையத்துக்கு 22-06-2024 அன்று அழைக்கப்பட்டு அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. அவரின் வாக்குமூலம் அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்காக அனுப்பப்பட்டுள்ளது என்றும் தெரியவருகின்றது.