யாழ். மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கம் – கனடா நடத்திய 22வது வருட நிதிசேர் நடை
Share
கடந்த ஜூன் 29, 2024 சனிக்கிழமை அன்று யாழ். மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கம் – கனடா நடத்திய 22வது வருட நிதிசேர் நடை (Walk-A-Thon) சிறப்பாகவும் வெற்றிகரமாகவும் நடைபெற்றது.
மேற்படி நடை பயணத்தை ❤ Heart & Stroke Foundation ❤க்காக Morningside Park இல் நடத்தி அதுவரை சேகரித்த $11,270.00 பணத்தை அந்த அமைப்பினருக்கு வழங்கியிருந்தார்கள். இந்த நற்காரியத்திற்கு தங்கள் நிதியை வழங்கிய அனைவருக்கும் யாழ். மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கம் – கனடா நன்றியைத் தெரிவிக்கின்றது.
கடந்த 22 வருடங்களாக சேகரிக்கப்பட்ட நிதியில் $50,000 க்கும் மேற்பட்ட தொகையினை Hospital for Sick Children அமைப்புக்கும், ஏறத்தாழ $30,000 தொகையினை Heart & Stroke Foundation அமைப்புக்கும் வழங்கும் சந்தர்ப்பம் கிடைத்தையிட்டு யாழ் மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கம் – கனடா உவகை கொள்கிறது.
இந்த நல் நோக்கத்துக்கு இத்தனை ஆண்டுகளாக தொடர்ந்து நிதி ஆதரவு வழங்கிக் கொண்டிருக்கும் அனைத்து நல்லிதயங்களுக்கும், நிதி சேகரிப்பில் முழு அளவில் ஈடுபட்டு நிர்ணயித்த தொகைக்கும் மேலாக பெற்றுத் தந்த தொண்டர்களுக்கும் சங்கத்தின் சார்பாக எம் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.