மதுபான போத்தலால் அரச பேருந்து மீது தாக்குதல். பயணி ஒருவர் காயம்!
Share
மதுபான போத்தலால் அரச பேருந்து மீது தாக்குதல் நடாத்தப்பட்ட நிலையில் பயணி ஒருவர் காயமடைந்துள்ளார். குறித்த சம்பவம் 16-07-2024 அன்று இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி பயணித்துக் கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபை வவுனியா சாலைக்குரிய ND-9941 இலக்க பேரூந்து மீது இவ்வாறு தாக்குதல் 2 மணியளவில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கிளிநொச்சி வைத்தியசாலையை அண்மித்த பகுதியில் வைத்து தனியார் பேரூந்து காப்பாளர் ஒருவரால் பியர் போத்தல் மூலம் பேரூந்துக்கு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தாக்குதலை மேற்கொண்ட நபர் பொதுமக்கள், பயணிகள், சாரதி மற்றும் காப்பாளரினால் பிடிக்கப்பட்டு கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தில் பியர் போர்த்தலின் கண்ணாடி துகள்கள் பட்டு பயணி ஒருவரும் காயமடைந்துள்ளார்.
சாரதி, பேரூந்தில் பயணம் செய்த பயணிகளுக்கு எந்தவிதமான ஆபத்தும் வராமல் பாதுகாப்பாக பேரூந்தை நிறுத்தியுள்ளார்.
சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.