யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் என்பு மச்சை மாற்று சத்திர சிகிச்சை நிலையம் திறந்து வைக்கும் நிகழ்வு!
Share
யாழ்ப்பாண. போதனா வைத்தியசாலை, யாழ்.மருத்துவபீடம், சிவபூமி அறக்கட்டளை, இணைந்து நடாத்தும் பெண்கள் தொடர்பான கருவளச் சிகிச்சை நிலையத்திற்கு கொடையாளர் சதா.மங்களேஸ்வரன் மற்றும் கலாநிதி ஆறு.திருமுருகனின் வேண்டுகோளுக்கு இணங்க அபயம் அறக்கட்டளை ஊடாக 50 லட்சம் ரூபா பெறுமதியான தாய்மார்களை ஸ்கான் செய்யும் இயந்திரம் கையளிக்கும் நிகழ்வு கடந்த 17-.07 2024 புதன்கிழமை அன்று இடம்பெற்றது.
சிவபூமி அறக்கட்டளைத்தலைவர் கலாநிதி ஆறு.திருமுருகனால் மேற்படி ஸ்கான் இயந்திரம் யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி மற்றும் யாழ்ப்பாண .மருத்துவ பீட மகப்பேற்று வைத்திய நிபுணர்கள், தாதியர்களிடம் உத்தியோக பூர்வமாக கையளிக்கப்பட்டது.
இதில் யாழ்.போதனா வைத்தியசாலை, யாழ்.மருத்துவ பீடம், வைத்தியர்கள், சிவபூமி அறக்கட்டளை நிலைய கொடையாளர்கள் பலரும் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.