LOADING

Type to search

இலங்கை அரசியல்

2024 ஆம் ஆண்டிற்கான MR.SRI LANKA போட்டி- நானுஓயா பிரதேசத்தை சேர்ந்த உதயகுமார் ஷங்கர் கணேஷ் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

Share

(01-08-2024)

2024 ஆம் ஆண்டிற்கான MR.SRI LANKA போட்டியில் மத்திய மாகாணத்தின் நுவரெலியா மாவட்டத்தின், நானுஓயா பிரதேசத்தை சேர்ந்த உதயகுமார் ஷங்கர் கணேஷ் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

கொழும்பு தெஹிவளையில் குறித்த போட்டி கடந்த 28.07.2024 திகதி நடைபெற்றது.

இப்போட்டியில், எல்லா மாவட்டங்களில் இருந்தும் 60 பேர் பங்குபற்றிய நிலையில் MEN PHYSIQUE மற்றும் 80 kg எடை பிரிவிற்கான BODYBUILDING ஆகிய பிரிவுகளில் உதயகுமார் சங்கர் கணேஷ் முறையே தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை வென்றுள்ளார்.

தற்போது இவர் நுவரெலியா நகரத்தில் THE IRON KINGDOM உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சி விப்பாளராக COACH கடமையாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.