LOADING

Type to search

இலங்கை அரசியல்

உடுத்துறை பாரதி விளையாட்டுக்கழக மென்பந்தாட்ட இறுதி போட்டியில் அம்பன் பிங்பொங் வெற்றி!

Share

உடுத்துறை பாரதி விளையாட்டுக்கழகம் தனது 80 ஆவது ஆண்டை நிறைவு செய்யும் முகமாக வடமாகாண ரீதியில் மாபெரும் விளையாட்டு தொடர்களை நடாத்திவருகின்றது

இந்நிலையில் 31-07-2024 அன்று மென்பந்தாட்ட தொடரின் இறுதி போட்டி உடுத்துறை பாரதி விளையாட்டுக் கழக மைதானத்தில் கோலாகலமாக ஆரம்பமானது

அம்பன் பிங்பொங் அணியை எதிர்த்து அம்பன் சிவனொளி அணி மோதியது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அம்பன் சிவனொளி அணித்தலைவர் முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தார்.

இதனடிப்படையில் முதலில் துடுப்பெடுத்தாடிய அம்பன் பிங்பொங் அணி 10 பந்து பரிமாற்றங்கள் நிறைவில் 9விக்கெட்டுகளை இழந்து 94 ஓட்டங்களை பெற்றது

95 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அம்பன் சிவனொளி அணியினர் 10 பந்து பரிமாற்றங்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 55 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியை தழுவியது

உடுத்துறை பாரதி விளையாட்டுக்கழக 2024 ஆம் ஆண்டுக்கான மென்பந்தாட்ட வெற்றிக்கிண்ண தொடரை அம்பன் பிங்பொங் அணியினர் தட்டிச் சென்றனர்.