BECOMING: “A JOURNEY TO WHOLENESS” A Dance Eveming presented by ‘Shakti Narthanalayam’ – Toronto
Share
‘சக்தி நர்த்தனாலயம்’ வழங்கிய ‘முழுமையை அடைவதற்கான ஒரு பயணம்’ நாட்டிய நிகழ்ச்சி பல உணர்வுகளை வெளிக்காட்டியது
ஶ்ரீமதி ஜனனி ரவிசங்கரின் ‘சக்தி நர்த்தனாலயம்’ வழங்கிய ‘முழுமையை அடைவதற்கான ஒரு பயணம்’ நாட்டிய நிகழ்ச்சி க டந்த 12-07-2026 ஞாயிற்றுக்கிழமை ‘யோர்க்வுட் நூலக கலையரங்கில் நடைபெற்றபொது மண்டபம் நிறைந்த நடன ஆர்வலர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பல உணர்வுகளை வெளிக்காட்டியது மட்டுமன்றி அவசியமான ஒரு நோக்கத்திற்கான ஒரு மேடை என்பதை வெற்றிகரமாக காட்டியது என்றும் கூறலாம்.
அன்றைய நிகழ்வுகளை திருமதி வான்ஜிதா சுஜந்தன் சிறப்பாக தொகுத்து வழங்கினார்.
ஶ்ரீமதி ஜனனி ரவிசங்கரின் ‘சக்தி நர்த்தனாலயம்’ நடனப் பள்ளியின் சிரேஸ்ட மாணவியான செல்வி மிசெல் நிரூஷியா கொட்வின் பிரதான நடனத் தாரகையாக விளங்க அன்றைய தினம் நடனப் பள்ளியின் அடுத்த நிலை மாணவிகளும் பங்கெடுத்த இந்த நடன மேடையும் முழுதான நடன நிகழ்ச்சியும் குருவின் திறமையையும் பிரதான நடனத் தாரகையின் பயிற்சியின் அர்ப்பணிப்பையும் ஏனைய நடனச் செல்விகளின் அபாரமான நடனப் பயிற்சியையும் குருவின் வழிகாட்டலை பின்பற்றிய நேர்த்தியையும் எடுத்துக் காட்டின என்றால் மிகையாகாது நடன நிகழ்வின் பிரதம விருந்தினராக நடன ஆசிரியை அற்புதராணி கிருபைராஜ் அவர்களும் சிறப்பு விருந்தினராக பாராளுமன்ற உறுப்பினர் யுனிற்றா நாதன் அவர்களும் மாகாணப் பாராளுமன்ற உறுப்பினர் லோகன் கணபதி அவர்களும் விசேட விருந்தினராக அர்த்தமி சிவா குருவிந்த் அவர்களும் கலந்து சிறப்பித்து அன்றை நடன நிகழ்வின் நோக்கம் மற்றும் குருவின் திறமை மற்றும் ஆழமான பார்வை அத்துடன் பிரதான நடனத் தாரகை செல்வி மிசெல் நிரூஷியா கொட்வினின் அர்ப்பணிப்பு மற்றும் நல்லதொரு நோக்கத்தோடு சிறந்த ஒரு கருப்பொருளை தனது பிரதன நடனத்தில் இணைத்துக் கொண்டமை போன்ற பல விடயங்களை உள்ளடக்கி தங்கள் வாழ்த்துரைகளை வழங்கியும் பாராட்டியும் அத்துடன் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கியும் மகிழ்ச்சியோடு விடைபெற்றனர்.
மண்டபத்தை நிறைத்து அன்றைய நடன மேடையை பெருமைப் படுத்திய அனைவருக்கும் ‘சக்தி நர்த்தனாலயம் நிறுவன அதிபர் ஜனனி ரவிசங்கர் மற்றும் செல்வி மிசெல் நிரூஷியா கொட்வினின் பெற்றோர் மற்றும் நண்பர்கள் அனைவரும் தங்கள் நன்றியை தெரிவித்தனர்.



























