பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு தவெக தலைவர் விஜய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தந்தை பெரியாரின் 147-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தை ‘சமூக நீதி நாள்’ ஆக தமிழ்நாடு அரசு 2021-ல் அறிவித்திருந்தது. அவரது பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் ...
விஜய்க்காக குவிந்த கூட்டம்தான் தற்போது தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பையும் பேசுபொருளாகவும் மாறியுள்ளது. தவெக தலைவர் விஜய் கடந்த சனிக்கிழமை திருச்சி, அரியலூரில் பிரசாரம் மேற்கொண்டார். விஜய் செல்லும் இடமெல்லாம் கட்டுக்கடங்கா கூட்டம் காணப்பட்டது. திருச்சி ஏர்போர்ட்டிலிருந்து மரக்கடை வரை மக்கள் வெள்ளத்தில் நீந்தியபடி விஜயின் வாகனம் சென்றது. ...
எடப்பாடி பழனிசாமி அமித்ஷாவை சந்தித்த பின் முகத்தை கைக்குட்டையால் மூடிக்கொண்டுவந்தார் என்று தமிழக அரசியலில் பரபரப்பாக பேசப்பட்டது. அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து வருகிறார். இதற்கிடையே, அ.தி.மு.க. அமைப்பு செயலாளராகவும், முன்னாள் அமைச்சராகவும் ...