இலங்கை விமானப்படையின் 73 ஆவது ஆண்டு பூர்த்தியை யாழ்ப்பாணத்தில் கொண்டாட தீர்மானிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களிடம், இலங்கை விமானப்படையின் படைத்தளபதி ஏயார் மார்சல் உதேனி ராஜபக்ஸ தெளிவுப்படுத்தினார். யாழ்ப்பாணத்திலுள்ள வட மாகாண கௌரவ ஆளுநரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில், இலங்கை விமானப்படையின் படைத்தளபதி உள்ளிட்ட ...
பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் ஏற்பாட்டில் பருத்தித்துறை இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தினருடன் இணைந்து 12-12-2023 அன்று கடற்கரையோரங்களில் பிளாஸ்டிக் பொருட்கள் அகற்றியதுடன் டெங்கு பெருகக்கூடிய இடங்களும் இல்லாதொழிக்கப்பட்டன. குறித்த நிகழ்வு காலை 8:00 மணியிலிருந்து 11மணிவரை முன்னெடுக்கப்பட்டது. குறிப்பாக வல்வெட்டித்துறை கடற்கரையோர பிரதேசங்களில் காணப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள், ...
(மன்னார் நிருபர்) (12-12-2023) வட மாகாண ரீதியில் நெற் பயிரில் ஏற்படும் பாரிய நோய் தாக்கமான ‘வெண்முதுகு தாவரத்தத்தியின்’ தாக்கம் தொடர்பாக இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (12) மன்னார் மாவட்ட விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கு தெளிவு படுத்தும் விசேட கலந்துரையாடல் மன்னார் உயிலங்குளத்தில் அமைந்துள்ள கட்டுக்கரை குள திட்ட ...