இலங்கையில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட பாரிய மனித புதைகுழி உள்ளிட்ட போரினால் பாதிக்கப்பட்ட வன்னி மண்ணில் கண்டெடுக்கப்பட்ட இரண்டு புதைகுழிகள் தொடர்பான அடுத்தகட்ட விசாரணைகளை முன்னெடுப்பதற்கு நீதிமன்ற அனுமதி கிடைத்துள்ளது. 11 வருடங்களுக்கு முன்னர் மன்னாரில் தற்செயலாகக் கண்டுபிடிக்கப்பட்ட திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழியின் மாதிரிகளை வெளிநாட்டு ஆய்வகத்திற்கு அனுப்புவதற்கும், சதொச ...
நடராசா லோகதயாளன் *இலங்கை – இந்திய மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வுகாண்பதற்கு அரசாங்கம் புதியமுயற்சியொன்றை முன்னெடுத்துள்ளது. அதற்கமைய இருநாடுகளினதும் கடற்றொழில் அமைச்சுக்களுக்கிடையில் எதிர்வரும் 29 ஆம் திகதி கொழும்பில் விசேட பேச்சு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்ஷங்கரின் இலங்கை விஜயத்தின்போது இந்த பிரச்சினை தொடர்பில் ...
கடந்த ஆட்சிக் காலத்தில் நாம் புதிய மதுபான சாலைக்கான அனுமதியை அரசிடமிருந்து பெற்றுக் கொண்டதாக பல்வேறு தரப்புகளாலும் முன்வைக்கப்படுகிற ஆதாரப்பூர்வமற்ற தகவல்களுக்கு சட்ட நடவடிக்கை எடுக்க தயாராகி வருகிறோம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். இன்றையதினம் அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார், ...