LOADING

Type to search

கனடா அரசியல்

Toronto’s United Tamil Sports Club celebrates its 20th successful Anniversay in Markham

Share

ரொறன்ரோ ஐக்கிய தமிழர் விளையாட்டுக் கழகம் தனது பயணத்தின் 20வது ஆண்டைக் கொண்டாடியது

Toronto’s United Tamil Sports Club என தமிழ் விளையாட்டுப் பிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் நன்கு அறிமுகமான ‘ரொறன்ரோ ஐக்கிய தமிழர் விளையாட்டுக் கழகம்’ தனது விளையாட்டுத்துறை பயணத்தின் 20வது ஆண்டை கடந்த வாரம் மார்க்கம் நகரில் உள்ள ‘ஜெஸ்மின் பாங்குவற்’ மண்டபத்தில் சிறப்பாகக் கொண்டாடியது.

கழகத்தின் தலைவி திருமதி சுஜாதா சுதர்சன் மற்றும் தலைமைப் பயிற்றுவிப்பாளர் ( CHIEF COACH ) திரு தேவராஜ் சின்னத்துரை ஆகியோர் தலைமையில் கழகத்தின் அனைத்து உறுப்பினர்களும் பெற்றோர்களும் இணைந்து மேற்படி வெற்றிக் கொண்டாட்டத்தை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

விழாவின் சிறப்பு விருந்தினர்களாக பாராளுமன்ற உறுப்பினர் யுனிற்றா நாதன்- மாகாண இணையமைச்சர் விஜேய் தணிகாசலம்- நகரசபை உறுப்பினர்கள் நீதன் சண்முகராஜா மற்றும் பார்த்தி கந்தவேள் உட்பட சில விளையாட்டுத் துறை பயிற்சியாளர்களும் அழைக்கப்பெற்றிருந்தார்கள்.

விஜய் தணிகாசலம் அவர்கள் ஒன்றாரியோ மாகாண முதல்வர் டக்போர்ட் சார்பிலும் ஒன்றாரியோ விளையாட்டுத்துறை அமைச்சர் சார்பிலும் பாராட்டு மடல்களை வழங்கி தலைமைப் பயிற்றுவிப்பாளர் ( CHIEF COACH ) திரு தேவராஜ் சின்னத்துரை அவர்களைக் கௌரவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் யுனிற்றா நாதன் அவர்களும் பாராளுமன்றம் சார்பான பாராட்டிதழை வழங்கினார்.

நூற்றுக்கணக்கான மாணவ மாணவிகள் தங்கள் தரத்திற்கு ஏற்ப பாராட்டுக் கேடயங்களையும் சான்றிதழ்களையும் பெற்றுக்கொண்டனர்.

பெற்றோர் மற்றும் விளையாட்டுப் பிரியர்கள் மற்றும் வர்த்தகப் பிரமுகர்கள் என பலரும் கலந்து சிறப்பித்த இவ்விழாவில் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.