LOADING

Type to search

இந்திய அரசியல்

அசாமில் கனமழை, வெள்ளத்தால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 97 ஆக உயர்ந்துள்ளது

Share

அசாமில் கனமழை, வெள்ளத்தால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 97 ஆக உயர்ந்துள்ளது. அசாம் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டித் தீர்த்தது. இதில் கோல்பாரா, காக்சார், லக்கிம்பூர், திப்ரூகர், ஜோர்ஹட், பிஸ்வநாத், சராய்தியோ, நல்பாரி, பக்சா, சிவசாகர், தர்ரங், சோனித்பூர், தின்சுகியா, உதல்குரி, கோலாகாட், கர்பி அங்லோங் உள்ளிட்ட 25 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. 480-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. கனமழையை தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளத்தால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மோசமான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. சுமார் 2 வாரங்களாக ரெயில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். வெள்ளம் பாதித்த பகுதியில் உள்ள மக்கள் அங்கிருந்து மீட்கப்பட்டு மாநிலம் முழுவதும் உள்ள சுமார் 133 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கனமழையை தொடர்ந்து பல பகுதிகளில் வெள்ளம் வடிந்து வருகிறது. இதனால் பாதிப்புகளும் குறைந்து வருகின்றன. எனினும், வெள்ளம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்றைய நிலவரப்படி இதுவரை கனமழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 97 ஆக அதிகரித்துள்ளது.