அனிஷ்மா நடிப்பில் உருவாகும் படம் ‘மொத ராத்திரி’
Share
மைத்ரி மூவி மேக்கர்ஸ் தமிழில் தயாரிக்கும் மூன்றாவது படமான புரொடக்ஷன் நம்பர் 3 தற்போது ‘மொத ராத்திரி’ என தலைப்பிடப்பட்டுள்ளது. நல்ல கதையம்சம் கொண்ட பொழுதுபோக்கு திரைப்படமான இதன் முதல் பார்வை மற்றும் தலைப்பை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டார். ராஜா கருப்பசாமி இயக்கும் இந்தப் படத்தில் அனிஷ்மா அனில்குமார் நடிக்கிறார். இவர்களுடன் ரிஷிகாந்த், அனிஷ்மா அனில்குமார், சேத்தன், ஏ. வெங்கடேஷ், பக்ஸ், அப்துல் லீ, ஷெல்லி கிஷோர், சங்கீதா பாலன், பானுபிரியா, சுமித்ரா தேவி. எல், வர்ஷினி கார்மேகம், கார்த்திகேயன், வேலன், கெளஷிக் கபிலன் மற்றும் பலர் நடிக்கிறார்கள். வழக்கத்திற்கு மாறான ஒரு திருமணம், ஒரு இரவு, இரண்டு அறிமுகமில்லா நபர்கள், ஆச்சரியங்கள், பல பொய்கள் என ஓர் இரவு எல்லாவற்றையும் மாற்றுகிறது என்பதுதான் ‘மொத ராத்திரி’. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பாளர் நவீன் யெர்னேனி பகிர்ந்து கொண்டதாவது, “பிரம்மாண்டமான எண்டர்டெயின்மெண்ட் கதைகளை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் அதே சமயம், அனைத்து தரப்பு பார்வையாளர்களையும் கவரும் வகையிலான வலுவான கதைகளையும் தயாரிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறோம். திறமையான புதியவர்களுக்கு எங்கள் நிறுவனத்தில் எப்போதும் வாய்ப்பு உண்டு. ‘மொத ராத்திரி’ திரைப்படத்தின் கதையை இயக்குநர் ராஜா கருப்பசாமி சொன்னபோதே இதுபோன்ற தனித்துவமான என்கேஜிங் கதைகளை பெரிய திரையில் கொண்டு வர வேண்டும் என முடிவு செய்தோம். இளம் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப குழுவினருடன் இணைந்து பணியாற்றுவது உற்சாகமாக உள்ளது. இதுபோன்ற உற்சாக அனுபவம் திரையரங்குகளில் பார்வையாளர்களுக்கும் கிடைக்கும் என நம்புகிறோம்” என்றார்.















