LOADING

Type to search

சினிமா

கீர்த்தி சுரேஷ் மிஷ்கின் நடித்துள்ள “சத்தியவான் சாவித்திரி” படப்பிடிப்பு நிறைவு

Share

எஸ்.சக்திவேல் மற்றும்  உமேஷ் குமார் பன்சால்  தயாரிப்பில், கீர்த்தி சுரேஷ், மிஷ்கின் நடிக்கும் “சத்தியவான் சாவித்திரி” படத்தின் அறிவிப்பு  வெளியானது. இப்படத்தை பிரவீன் எஸ்.விஜய் இயக்குகிறார். இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்க, அவருடன் எதிர் மூத்த வழக்கறிஞராக மிஷ்கின் இணைந்து நடிக்கிறார். இவர்களுடன் ஹார்ட்பீட் சாருகேஷ், பாலசரவணன்,  மதுசூதனன், ஆர்.சுந்தர்ராஜன், ஷில்பா மஞ்சுநாத், பிரிகிடா, மாலா பார்வதி, தீபா, ஏ.வெங்கடேஷ், ராஜா ராணி பாண்டியன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் இணைந்து நடிக்கின்றனர். வக்கீல் கூட்டத்திற்கு நடுவே சிவப்பு உடையில், தீர்க்கமான பார்வையுடன் திரும்பி பார்க்கும் கீர்த்தி சுரேஷ் கதாப்பாத்திரத்தை வெளிப்படுத்தும் பதாகை, ரசிகர்கள் மற்றும் திரை ஆர்வலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. ஒரு சந்தோசமான சராசரி பெண்ணாக வாழும் கீர்த்தி, அவரது சீனீயர்  ஒரு வழக்கில் தவறான பக்கம் வாதாடும் போது, அதை அவருக்கு உணர்த்த முற்படுகிறாள். ஆனால் அப்போது தான் சீனியரின் அசல் முகம் வெளிப்படுகிறது. அந்த வழக்கு கீர்த்தியின் வாழ்வை புரட்டி போடும் விதமாக இருக்கிறது. அதிலிருந்து அவர் மீண்டாரா என்பது தான் இப்படத்தின்  கதை. ஒரு வழக்கை மையமாக வைத்து, திரில்லர் பாணியில் அனைத்து கமர்ஷியல் அம்சங்களுடன்,  அனைவரும் ரசிக்கும் வண்ணம்,  ஒரு ஜனரஞ்சக படைப்பாக இப்படத்தை உருவாக்குகி வருகிறார் அறிமுக இயக்குநர் பிரவீன் எஸ் விஜய். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், போஸ்ட் புரடக்சன் பணிகள் தற்போது பரபரப்பாக நடந்து வருகிறது. விரைவில் முன்னோட்டம் பற்றிய அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.