LOADING

Type to search

உலக அரசியல்

அமெரிக்கா தாக்குதலுக்கு பதிலடியாக மும்பை – டில்லியை தகர்ப்போம் – பாகிஸ்தான் தூதர் பேச்சு

Share

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடந்த நிகழ்ச்சியில் இந்தியாவுக் கான அந்த நாட்டின் முன்னாள் தூதர் அப்துல் அசித் பேசினார். அப்போது அவர், பாகிஸ்தான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் அதற்கான விலையை இந்தியா கொடுக்கும் என்றார். அவர் பேசுகையில், “பாகிஸ்தான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்துவதாக வைத்துக்கொள்வோம். அவ்வாறு தாக்குதல் நடத்தினால் கொஞ்சம் கூட யோசிக்காமல் இந்தியா மீது தாக்கு தல் நடத்துவோம். இந்தியாவின் மும்பை மற்றும் டில்லி உள்ளிட்ட நகரங்கள் குண்டுவெடிப்பினால் போர்க்களமாகும். எங்கும் அலறலும் பீதியும் ஏற்படும்” என்றார். மேலும் அவர், “பாகிஸ்தான் மீது அமெரிக்காவின் தாக்குதலுக்கு வாய்ப்பு குறைவு என்றாலும், பாகிஸ்தான் விரும்பும் இடத்தில் தாக்குதல் நடத்துவதை தவிர வேறுவழியில்லை” என்றார். ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதலுக்கு வளைகுடா நாடுகள் பலிகடாவாக மாறியதை பொருத்தி பார்த்து இந்த கருத்தை அவர் தெரிவித்தார்.