LOADING

Type to search

இலங்கை அரசியல்

அரச பயங்கரவாதம் இனியும் வேண்டாம் PTA ஐ இரத்துச் செய்! PSTA ஐக் கிழித்தெறி”

Share

– கொட்டும் மழையிலும் கொழும்பில் ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாகப் பெரும் போராட்டம்

அரச பயங்கரவாதம் இனியும் வேண்டாம் என்பதை வலியுறுத்தியும், நாட்டில் நடைமுறையிலுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) உடனடியாக இரத்துச் செய்யக் கோரியும், முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலத்தை (PSTA) உடனடியாகக் கைவிடுமாறு வலியுறுத்தியும் கொழும்பில் 13ம் திகதி செவ்வாய்க்கிழமை கொட்டும் மழையிலும் பெரும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக அன்று பிற்பகல் இந்தப் போராட்டம் நடைபெற்றது.

காலங்காலமாகப் பயன்பாட்டிலுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முற்றாக இரத்துச் செய்ய வேண்டும் என்று இந்தப் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலத்தைக் கைவிடுமாறும் இதன்போது கோரிக்கை விடுக்கப்பட்டது.

அனைத்துவிதமான அரச அடக்குமுறைச் சட்டங்களுக்கும் எதிராக முன்னெடுக்கப்பட்ட இந்தப் போராட்டத்தில் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள், மதகுருமார்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

ஜனாதிபதி செயலக வளாகப் பகுதியில் இந்தப் போராட்டம் நடைபெற்றமையால் அந்தப் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.