ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது
Share
ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் காலை நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. அதிகாலை 4.41 மணியளவில் (இந்திய நேரப்படி) ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் 181 கிலோமீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் 36.740 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 71.484 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலையில், மதியம் 12.34 மணியளவில் ரிக்டரில் 4.1 அளவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ஒரே நாளில் அடுத்தடுத்து ஏற்பட்ட இரண்டு நில அதிர்வால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.















